7வது மண்டல பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

1 month ago 8

 

அம்பத்தூர், செப். 30: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில், கால்வாய்களை தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 7வது மண்டல பகுதிக்கு உட்பட்ட முகப்பேர், நொளம்பூர் ஜெ.ஜெ.நகர், கொரட்டூர், அம்பத்தூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஸ்ரீதேவி நேரில் ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகளை குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல், அப்பகுதி மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்வதற்கு குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், உங்களுக்கு ஏதும் குறைகள் இருந்தால் குடிநீர் வாரிய பகுதி பொறியாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்தார். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பருவ மழை முன்னெச்சரிக்கையாக கால்வாய்களை தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடிநீர் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பிரச்னைகள் ஏதும் உள்ளதா, என கேட்டறிந்து வருகின்றனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது,’’ என்றனர்.

The post 7வது மண்டல பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article