₹78 கோடியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள்

2 weeks ago 1

திருவாரூர், ஜன. 22: திருவாரூர் நகரில் இருந்து வரும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அளவில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிபடையின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அம்ரூட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் தற்போது ரூ.78 கோடியே 15 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயானது சுமார் 2 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 2 அடி ஆழத்திற்கும் கான்கிரிட் கொண்டு மூடிட வேண்டும் என்ற நிலையில் சுமார் அரை அடி ஆழத்தி ற்கு மட்டுமே பெயரளவில் கான்கிரிட் போடும் நிலை உள்ளது என்றும், எனவே உரிய அளவில் உரிய தரத்துடன் பணியினை மேற்கொள்ளும் வகையில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று திருவாரூர் ராமகே ரோட்டில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களை கான்கிரிட் கொண்டு மூடும் பணியினை நகராட்சி கமிஷ்னர் தாமோதரன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மேலும் கான்கிரிட்டின் ஆழம் குறித்தும் ஆய்வு செய்த நிலையில் இதுகுறித்து கமிஷ்னர் தாமோதரன் கூறியிருப்பதாவது: அம்ரூட் 2.0 திட்டத்தில் 3 அடி ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதன்பின்னர் 27.5 செ.மீ (ஒரு அடிக்கு 2.5 செ.மீ குறைவு) அளவில் கான்கிரிட் போடுவதற்கு திட்ட மதிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நகர்முழுவதும் இதே அளவில் உரிய தரத்துடன் கான்கிரிட் அமைப்பதற்கு ஓப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post ₹78 கோடியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article