75-வது அரசியலமைப்பு தினத்தில் பேரவை சிறப்புக் கூட்டம், கிராம சபை கூட்டம் நடத்த விசிக கோரிக்கை

2 months ago 12

சென்னை: நாட்டின் 75-வது அரசியலமைப்பு தினத்தை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலர் ந.முருகானந்தத்தை சந்தித்த சட்டப்பேரவை விசிக குழுத் தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான சிந்தனைச் செல்வன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவின் விவரம்: நாட்டின் 75-வது அரசியலைமைப்பு தினத்தை (நவ.26) போற்றும் வகையில் ஒரு நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி சமத்துவம், சமூக நீதி, உடன்பிறப்புணர்வு ஆகிய விழுமியங்களை மேம்படுத்தும் வகையிலும், அதற்காக பாடாற்றிய தலைவர்களை நினைவு கூர்ந்து தீர்மானங்களை இயற்ற வேண்டும்.

Read Entire Article