700 பேர் பங்கேற்ற சர்வதேச செஸ் போட்டியில் கோவை சிறுவன் 35வது இடம் பிடித்து அசத்தல்

2 months ago 6

 

கோவை, பிப்.25: இந்தியன் செஸ் கான்கரிநேஷன் சார்பாக சர்வதேச அளவிலான செஸ் ரேங்கிங் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆஸ்திரேலியா, சிகாகோ, மொராக்கோ, ஜிம்பாவே உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர் வரை பங்கேற்ற இந்த போட்டியில் கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆத்விக் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் சிறுவன் ஆதிவிக் 9 சுற்றுகள் விளையாடி மொத்தம் 7 புள்ளிகள் எடுத்தார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 700 பேர் பங்கேற்ற இந்த ரேங்கிங்க் செஸ் போட்டியில் சிறுவன் ஆத்விக் 35வது இடம் பிடித்து அசத்தினார். இவருக்கு ரூ. 2 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக சிறுவன் ஆத்விக் பல்வேறு மாநிலம் மற்றும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் விளையாடி வெற்றிகளை குவித்துள்ளார். தற்போது வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான செஸ் போட்டிக்கு மாணவன் ஆத்விக் தயாராகி வருகிறார்.

The post 700 பேர் பங்கேற்ற சர்வதேச செஸ் போட்டியில் கோவை சிறுவன் 35வது இடம் பிடித்து அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article