70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வருவாய் பிரிவினருக்கும் ஆயுஷ்மான் அட்டை; டெல்லி அரசு முடிவு

2 days ago 3

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் அவருடைய அமைச்சரவையை சேர்ந்த மந்திரிகள் அனைவரும், கூட்டம் ஒன்றில் இன்று பங்கேற்றனர். இதில், மாநில மற்றும் மத்திய அரசுகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நோக்கம் ஆயுஷ்மான் அட்டைகளை அனைவருக்கும் வழங்குவது என்ற அளவில் இருந்தது. இதனால், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற அளவில் சுகாதார காப்பீடு வசதி கிடைக்கப்பெறும். 2-ம் மற்றும் 3-ம் நிலையில் மருத்துவமனைகளில் சேரும் நபர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

இதன்படி, டெல்லியில், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வருவாய் பிரிவினருக்கும் ஆயுஷ்மான் அட்டைகளை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

Read Entire Article