மதுரை,
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது. இதனிடையே, மதுரையில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் 70 ஆண்டுகளுக்குப்பின் அதிக மழை பதிவாகியுள்ளது. 70 ஆண்டுகளுக்குப்பிறகு அக்டோபர் மாதத்தில் மதுரை மாநகரம் அதிக மழையை சந்தித்துள்ளது. 1955ம் ஆண்டில் அக்டோபர் 17ம் தேதி மதுரை நகரில் 115 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது 70 ஆண்டுகளுக்குப்பிறகு 2024 அக்டோபரில் (இந்த மாதம்) 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.