7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

2 days ago 4

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Read Entire Article