7 ஆண்டுகளுக்கு பிறகு துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்

2 hours ago 2

சென்னை,

மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சவுபின் சாஹிர். தொடர்ந்து துல்கர் சல்மான், பகத் பாசில் உள்ளிட்டோருடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் துல்கர் சல்மானை வைத்து கடந்த 2017-ம் ஆண்டு பறவ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறார். இந்நிலையில், கூலி படப்பிடிப்பை முடித்த பின்பு துல்கர் சல்மானை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். சுமார் 7 வருடங்களுக்கு பின்பு சவுபின் சாஹிர் இயக்கும் 2-வது படத்திலும் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Read Entire Article