68ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 month ago 5

காஞ்சிபுரம்: அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்று அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில்; மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், படுநெல்லி பாபு, பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைப்பு செயலாளர்கள் சோமசுந்தரம், வள்ளிநாயகம், மாநகர பகுதி செயலாளர் பாலாஜி ஜெயராஜ், ஸ்டாலின் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விசிக சார்பில், மாநகர மாவட்ட செயலாளர் மதிஆதவன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக சார்பில், மாநகர செயலாளர் மகேஷ் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.அருள், உமாசங்கர், ராமானுஜம், சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மா.கம்யூ மாவட்ட செயலாளர் கே.நேரு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயலாளர் இ.முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இ.கம்யூ கட்சி சார்பில் காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, கமலநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் சுந்தரமூர்த்தி, சங்கர், ஸ்டாலின், தொகுதி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்கம் சார்பில், அமைப்பின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில். ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் மோகன், வரதராஜன், நடராஜன், தமிழ்ச்செல்வன், ஏழுமலை, பன்னீர்செல்வம், தெய்வசிகாமணி, பாலகிருஷ்ணன், வெங்கடேசன், பர்ணபாஸ், செல்வமணி, முகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய விசிக சார்பில், ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே, அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நகர செயலாளர் பழனி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், விசிக மாவட்ட செயலாளர் மேனகாதேவி கோமகன், ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

செய்யூர்: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சனாதன எதிர்ப்பு நாள், போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் கருஞ்சட்டை பேரணி செய்யூர் அடுத்த நல்லூர் கூட்டுச்சாலையில் மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் நடந்தது. இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் எழில் கரோலின் கலந்துகொண்டு புத்தூர் ஜங்ஷன் பகுதியில் இருந்து கருஞ்சட்டை பேரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவர் எழில் ராகுலன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், மாநில துணை செயலாளர் அன்புச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு திமுக சார்பில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விசிக சார்பில் மாவட்ட துணை செயலாளர் கராத்தே பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஆலோசகர் ஏழுமலை தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்போரூர்: திருப்போரூர் ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், நகர செயலாளர் முத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், பாமக, அம்பேத்கர் ஜனசக்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் ஆகிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்போரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் படத்திற்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post 68ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article