சென்னை: சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனை, 63 வயது நோயாளியின் இதயத்திலிருந்த 6 செ.மீ கட்டியை வெற்றிகரமாக அகற்றி உள்ளது. சென்னையை சேர்ந்த 63 வயதான நோயாளி ஒருவருக்கு நடக்கும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு திடீரென அதிக காய்ச்சல் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் நோயாளிக்கு நிமோனியா இருப்பதை கண்டறிந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சில நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமாகவில்லை, மேலும் மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில் அவரை ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. குறிப்பாக கார்டியாக் சிடி ஸ்கேன் மற்றும் 2டி எக்கோ ஸ்கேன் மேற்கொள்ளும் போது இதயத்தில் பந்து அளவிலான கட்டி இருப்பது தெரியவந்தது. அது இதய வால்வுகளுக்கு ரத்த ஓட்டத்தைத் தடுத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டது.
மேலும் அந்த கட்டி வளர்ச்சி அடைவதும் தெரிய வந்தது. அந்த கட்டியை விட்டால் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் டாக்டர் முத்துக்குமரன், டாக்டர் சந்தீப், மற்றும் அவரது குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டியை அகற்றி, சரியான ரத்த ஓட்டம் மற்றும் இதய செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதனால் நோயாளி இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
The post 63 வயது நோயாளியின் இதயத்திலிருந்த 6 செ.மீ கட்டி வெற்றிகரமாக அகற்றம்: ஐஸ்வர்யா மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.