60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக வர வேண்டாம்- திருப்பதி தேவஸ்தானம்

2 months ago 11

 திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். திருப்பதியில் ஆர்ஜித சேவை, ரூ 300 விரைவு தரிசனம், இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவை உள்ளன. இதில் நடைபாதை தரிசனத்தில் அலிபிரி மலை பாதை வழியாகவும் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகவும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் மலைபாதை வழியாக தரிசனத்திற்கு வரும் பொதுமக்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கியுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:

60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா,வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம். திருப்பதி தேவஸ்தானம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்டவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். அதேபோல, நீண்டநாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பயணத்தின் போது தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர், கோவில் செல்லும் மலைப்பாதையில் 1500-வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம்.

திருமலையில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேரமும் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், கிட்னி தொடர்பான தொந்தரவுகளுக்கு சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article