குஜராத் அணிக்கு எதிரான 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 15.5 ஓவரில் 212 ரன் குவித்து சாதனை வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்காக ஆடிய வைபவுக்கு, 10வது ஓவரை ஆப்கானிஸ்தானை சேர்ந்த கரீம் ஜனத் வீசினார். ஐபிஎல்லில் இதுதான் அவருக்கு முதல் போட்டி. அவர் வீசிய ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய வைபவ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். அடுத்த பந்து என்னாகுமோ என்ற மிரட்சியுடன் கரீம் வீசிய 3வது பந்து, சிக்சருக்கு பறந்தது.
அதற்கடுத்த இரு பந்துகளும் எல்லைக் கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தன. அதைத் தொடர்ந்து கடைசி பந்தை அந்த ஓவரின் 3வது சிக்சர் ஆக்கினார் வைபவ். இதன் மூலம், ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியில் 30 ரன்கள் வாரித் தந்த வள்ளலாக மோசமான சாதனையை கரீம் ஜனத் அரங்கேற்றி உள்ளார். இதற்கு முன், வருண் சக்வர்த்தி 25 ரன்கள் அள்ளித் தந்ததே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
The post 6 பந்துகளில் 30 ரன் வாரித்தந்த வள்ளல் appeared first on Dinakaran.