5ஜி அலைக்கற்றை சேவையை தொடங்காத அதானி குழுமம்: அபராதம் விதித்த ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை!

2 hours ago 4

டெல்லி: இரண்டு ஆண்டுகளை கடந்தும் ஏலத்தில் உரிமம் பெற்ற 5ஜி அலைக்கற்றையை இன்னும் பயன்படுத்ததால் அதானி நிறுவனத்துக்கு ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தது. விதிகளின் படி ஏலம் எடுத்த ஓராண்டுக்குள் சேவையை தொடங்க வேண்டும். ஆனால் அதானி நிறுவனம் உரிமம் பெற்ற ஆந்திரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழகம் மற்றும் மும்பை என 6 வட்டங்களில் இதுவரை 5ஜி சேவையை தொடங்கவில்லை.

இது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் கிடைக்காததால் அந்நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. தனது குழும நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு இச்சேவையை பயன்படுத்துவதாக அதானி நிறுவனம் கூறி வந்த நிலையிலும் முறைப்படி சேவை தொடங்கப்பட வில்லை. இந்நிலையில், ஏல உரிமத்தை திரும்ப ஒப்படைப்பது குறித்து அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதே சமயம் விதிகளுக்கு உட்பட்டு சேவையை இதுவரை தொடங்காததால் உரிமத்தை தொலைத் தொடர்புத்துறை ரத்து செய்ய கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

The post 5ஜி அலைக்கற்றை சேவையை தொடங்காத அதானி குழுமம்: அபராதம் விதித்த ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை! appeared first on Dinakaran.

Read Entire Article