55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படையின் ரபேல்

3 months ago 18

புதுடெல்லி: கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் அமெரிக்காவில் சீன உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க எல்லைக்குள் பல நாட்களை பறந்த அந்த ராட்சத பலூனை ஏவுகணை ஏவி அந்நாட்டு விமானப்படை அழித்தது. இது பற்றிய தகவலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்தது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் சீனா உளவு பலூன்களை ஏவி இருக்கும் என்ற சந்தேகம் இந்திய ராணுவம், விமானப்படைக்கு வந்தது.

இதையடுத்து, எல்லையோர வான்வெளியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் சீன உளவு பலூனை இந்திய விமானப்படை அழித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி, நாட்டின் கிழக்கு பகுதியில் 55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சிறிய ரக சீன உளவு பலூனை ரபேல் போர் விமானத்தில் இருந்த விமானி ஏவுகணை வீசி அதை அழித்துள்ளார்.

 

The post 55 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படையின் ரபேல் appeared first on Dinakaran.

Read Entire Article