54-வது தேசிய பாதுகாப்பு தின விழா: அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு

15 hours ago 2

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபேன் இந்தியா நிறுவனத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் 54-வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய பாதுகாப்பு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அமைச்சர் உரையாற்றும் போது, ``தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவது முக்கியம்.

தொழிலாளர்கள் ஆரோக்கியம், நலனை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணியிடங்களில் அபாயங்களைத் தடுக்க முறையான திட்டமிடல் அவசியம். தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைப்பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

Read Entire Article