டெல்லி : தமிழ்நாட்டின் தொல்லியல் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் செழுமையான வரலாறு உலகிற்கு பறைசாற்றப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த பதிவை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாட்டை தொல்லியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொல்லியல் கண்டுபிடிப்பின்மூலம் இந்தியாவின் செழுமையான வரலாறு உலகிற்கு பறைசாற்றப்படுகிறது. இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ்நாடுதான் முக்கிய பங்காற்றுகிறது.நாட்டின் ஒற்றுமைக்கும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகமாகியுள்ளது. இது இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றத்தை எடுத்துரைக்கின்றன.இந்தியாவின் வளமையான பாரம்பரியங்கள் தொடர்ந்து உலகிற்கே உத்வேகமளித்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், செழித்து வளர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை கொண்டாடுவோம்.5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதை நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகம்.. காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பெருமிதம்! appeared first on Dinakaran.