
சென்னை,
விஜயகாந்த் நடித்த'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக எஸ் ஏ சந்திரசேகர் மாறினார். தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவராக எஸ் ஏ சந்திரசேகர், தன்னுடைய மகன் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அறிமுகம் செய்தார். 90-களின் தொடக்கத்தில் தனது மகன் விஜய்யை நாயகனாக வைத்து சில படங்களை இயக்கினார்.
தன் மனைவி ஷோபாவுடன் சென்னையில் வசித்து வரும் எஸ் ஏ சி, தன் மகன் விஜய்யின் த.வெ.க கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.தொலைக்காட்சி நேர்காணல்களில், விஜய் குறித்து சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர், 52-வது திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது தன் மனைவி ஷோபாவுக்கு திருமணநாள் பரிசாக புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். ஷோரூமில் கார் டெலிவரி எடுத்த வீடியோவை எஸ் ஏ சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த காரின் விலை ரூ75 லட்சம் என கூறப்படுகிறது. கார் வாங்கியுடன, அங்கேயே எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா இருவரும் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.