5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரம்: ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றி சாதனை

2 months ago 11

சார்ஜா: வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் பொறுப்புடன் ஆடிய ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி உள்ளது. வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் வங்கதேசத்தை 92 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான், 2வது போட்டியில் 68 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.

இந்நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்புடன், சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் களமிறங்கின. முதலில் ஆடிய வங்கதேசம் 8 விக். இழப்புக்கு 244 ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் நிதானமாக ஆடி 119 பந்துகளில் 66 ரன் எடுத்தார். மகமதுல்லா, 98 பந்துகளில் 98 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். ஆப்கன் பந்து வீச்சாளர் அஸ்மதுல்லா ஒமர்சாய் 37 ரன் தந்து, 4 விக் வீழ்த்தினார்.

பின், 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி களமிறங்கியது. துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், அபாரமாக ஆடி 120 பந்துகளில், 7 சிக்சர், 5 பவுண்டரிகள் விளாசி, 101 ரன் குவித்து வெற்றிக்கு உதவினார். அதன் பின் வந்தோர் கை கொடுக்காவிட்டாலும், அஸ்மனுல்லா ஒமர்சாய் அற்புத ஆட்டத்தை வௌிப்படுத்தினார். அவர் 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 77 பந்துகளில் 70 ரன் குவித்தார்.

இறுதியில், 5 விக் இழப்புக்கு 246 எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடரையும் கைப்பற்றியது. வங்கதேச பந்து வீச்சாளர்கள நஹித் ராணா, முஸ்தபிசுர் மிராஸ் தலா 2 விக் வீழ்த்தினர்.

The post 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரம்: ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றி சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article