5 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு

1 month ago 5

சென்னை,

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 15-ந்தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கடலூரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், தென்மாவட்டங்களில் 13-ந்தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article