திருவனந்தபுரம்: கேரளாவில் தலித் சிறுமியை 5 வருடமாக 60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 20 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் 18 வயதான தலித் சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். விளையாட்டு வீராங்கனையான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தைகள் நல அமைப்பினரிடம் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அதில், தன்னுடைய 13 வயது முதல் 5 வருடங்களுக்கும் மேலாக தனது காதலன், விளையாட்டு பயிற்சியாளர்கள் உள்பட பலர் தன்னை பலாத்காரம் செய்ததாக பகீர் தகவலை குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் விளையாட்டு வீராங்கனையான பள்ளி மாணவிக்கு 13 வயது இருக்கும்போது கடந்த 2019ல் ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்தக் காதலன் தன்னுடைய நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கினார்.
அதில் ஒருவர் மாணவியை படம் எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பலமுறை தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துள்ளனர். இந்த மாணவி தனது தந்தையின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த நம்பரை வாங்கிக்கொண்டு தினமும் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி மாணவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளனர். 64 பேர் பலாத்காரம் செய்ததாகவும், 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதில் 62 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி தலித் என்பதால் எஸ்சி- எஸ்டி பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களான பத்தனம்திட்டா மாவட்டம் பிரக்கானம் பகுதியைச் சேர்ந்த சுபின் (24), சந்தீப் (30), வினீத் (30), அனந்து (21) மற்றும் சுதி (24) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் மாணவிக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் ஆசிரியரும் அடங்குவர்.
இந்த வழக்கில் நேற்று பிளஸ் 2 மாணவர் உட்பட மேலும் 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைதானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூகநலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
* சிக்கியது எப்படி?
மாணவி பயன்படுத்தி வந்த அவரது தந்தையின் செல்போனில் தன்னை பலாத்காரம் செய்த நபர்களின் எண்களை மாணவி பதிவு செய்துள்ளார். தனது டைரியிலும் அந்த எண்களை குறிப்பிட்டுள்ளார். அதில் இருந்துதான் பலாத்காரம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் போலீசுக்கு கிடைத்தன. அதனடிப்படையில்தான் அவர்கள் அனைவரும் சிக்கினர். அதேபோல் கைதானவர்களின் செல்போன்களில் மாணவியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஏராளமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 5 ஆண்டுகளாக அரங்கேறிய பாலியல் வன்முறை 60க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் மாணவி: நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்:20 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.