40 நாளில் 77 முறை தமிழக மீனவர் மீது தாக்குதல்: மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு புகார்

4 hours ago 1

புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களின் துயர நிலையை அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை ஆதாரமில்லாமல் கைது செய்கின்றனர். மேலும் அவர்களது படகுகளை சிறை வைப்பது மட்டுமில்லாமல் மீனர்வர்களை துப்பாக்கியால் சுட்டும், அவர்களை கண்மூடித்தனமாக தாக்கவும் செய்துள்ளனர்.

இதில் கடந்த ஆண்டில் மட்டும் 528 க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த 40 நாட்களுக்குள், 77க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இன்னும் 216 மீன்பிடி படகுகளும், 97 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர். ஆனால் அவர்களை விடுவிக்கும் வகையில் ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதில் இலங்கை மற்றும் தமிழ்நாடு ஆகிய மீனவ சமூகங்கள் இரண்டையும் பாரபட்சம் பார்க்காமல் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த பிரச்னையை ஒன்றிய அரசால் தீர்க்க முடியவில்லை என்றால், அவர்களே தீர்த்துக்கொள்ளும் விதமான நடவடிக்கையை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விரைந்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

The post 40 நாளில் 77 முறை தமிழக மீனவர் மீது தாக்குதல்: மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு புகார் appeared first on Dinakaran.

Read Entire Article