விழுப்புரம்: விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 80 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது புதுச்சேரி மார்க்கம் செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன. புதிதாக போடப்பட்ட சாலைகளில் பல இடங்களில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் நிதியில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதில் குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்தன. புதிதாக போடப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதுகுறித்து டெல்லியிலிருந்து நகாய் நிறுவன குழுவினர் நேரில் ஆய்வு செய்து குறைகளை சுட்டிக் காட்டி சரிசெய்ய அறிவுறுத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இச்சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மீண்டும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஒப்பந்த நிறுவனம் மூடி மறைக்க சிமென்ட் கரைசலை ஊற்றி தற்காலிகமாக சரிசெய்துள்ளது. வளவனூர் பகுதியில் சாலைகள் இன்னும் இணைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் செல் லும் உயர்மின்கோபுரங்களை மாற்றிஅமைக்க இடம் கையகப்படுத்துதல், மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாததால் அந்த பகுதியில் சாலைதுண்டிக்கப்பட்டுள்ளது.
சர்வீஸ்சாலையில் இறங்கி மீண்டும் செல்லும் நிலைதான் உள்ளது. கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பாலபணிகள் ஒருபக்கம் முடிந்து போக்குவரத்து செல்கின்றன. ஆனால் மற்றொரு பக்கம் பணிகள் நடந்து வருகின்றன. இந்தமாத இறுதியில் அதுவும் முடிந்துவிடும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளவனூர் பகுதியில் துண்டிக்கப்பட்ட சாலைபணிகளை மேற்கொள்ள இன்னும் சிலமாதங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில் வரும் ஜனவரி 3 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆயத்தின் புதுச்சேரி திட்ட அமலாக்க பிரிவு இயக்குநர் அறிவித்துள்ளார்.
* சுங்க கட்டணம் எவ்வளவு?
கார், ஜீப், வேன் அல்லது இலகுரக மோட்டார் வாகனம் ஒருமுறை செல்ல ரூ.60 கட்டணம், ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கு ரூ.90, மாதாந்திர பாஸ் கட்டணமாக ரூ.1,985, மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலகுரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனம், மினி பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல ரூ.95, ஒருநாளுக்குள் திரும்பும் பயணத்திற்கு ரூ.145, மாதாந்திர பாஸ் கட்டணமாக ரூ.3,210 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், மண் ஏற்றிச்ெசல்லும் வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.315, ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணமாக ரூ.475, மூன்று அச்சு கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.220, ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.330 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு கொண்ட வாகனத்திற்கு ஒருமுறைசெல்ல ரூ.385, ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் 20 கி.மீ சுற்றளவுக்குள் ரூ.340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ‘பணிகள் தொடங்கும்போது 60 கி.மீ சுங்கக்கட்டணம் இருக்காதுனு சொன்னாங்க’
அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கலிவரதன் கூறுகையில், ‘இந்த சாலை பணிகள் தொடங்கும்போதே 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடி அமைக்கப்படமாட்டாது என்று கூறினார்கள். விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும்போது உத்தரவாதம் அளித்தனர். அதன்பிறகு சாலை போட்டவுடன் கெங்கராம் பாளையத்தில் இந்த சுங்கச்சாவடியை அமைத்துள்ளனர். இதனை கட்டும்போது பல மறியல் போராட்டங்களை நடத்தினோம். இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி அமைத்து தற்போது கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அருகில் மதகடிப்பட்டு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மாவட்டத்திலிருந்து அதிகம் பேர் செல்கின்றனர்.
அவர்களில் 95 சதவீதம்பேர் உடல்நலம் முடியாமல் காரில் செல்கின்றனர். இனி இவர்கள் சுங்க கட்டணம் செலுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. புதுச்சேரி, தமிழக விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதிலும் இனிபாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இவற்றை கருத்தில்கொண்டு மருத்துவமனை, விவசாயிகள் வேளாண்ெபாருட்கள் கொண்டு ெசல்ல விலக்கு அளிக்க வேண்டும். இதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்றனர்.
* சிதம்பரம்- கடலூர் நெடுஞ்சாலையில் டிச.23 முதல் சுங்ககட்டணம் அமல்
சிதம்பரம்- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரயில்வே பாலம், ஆற்று பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையில் புவனகிரி அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அது இதுவரை திறக்கப்படாததால் கட்டணம் வசூலிக்கப்படாமல்தான் இருக்கிறது. அதனால் கட்டணமின்றி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் வரும் 23ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
The post 4 வழிச்சாலை பணிகள் முழுமையாக முடியாத நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.