4-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

1 week ago 2

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா, சென்னையில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

இந்திய அணியில் முகமது ஷமி, துருவ் ஜுரெல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஓவர்டான், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சர், அடில் ரஷித் மற்றும் சாகிப் மக்மூத்.

Read Entire Article