ஊட்டி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி ராஜ்பவன் செல்கிறார். 28ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள டிஎஸ்எஸ்சி எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
29ம் தேதி ஊட்டி ராஜ் பவனில் ஓய்வெடுக்கும் அவர் 30ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
The post 4 நாள் பயணமாக 27ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகை appeared first on Dinakaran.