4 நாட்களில் தங்கம் விலை ரூ.2,720 சரிவு… ஒரு சவரன் ரூ.56,000கீழ் சென்றதால் நகை வாங்குவோர் ஹாப்பி!!

11 hours ago 2

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருவதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 14 நாட்களில் சவரனுக்கு ரூ.4,160 குறைந்துள்ளதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 31ம்தேதி ஒரு சவரன் ரூ.59,640 வரை சென்றது.நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7,085-க்கும், ஒரு சவரன் ரூ.56,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே போல் நேற்று காலையும் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.7,045-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,935க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்துள்ளது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திருமண சீசனில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post 4 நாட்களில் தங்கம் விலை ரூ.2,720 சரிவு… ஒரு சவரன் ரூ.56,000கீழ் சென்றதால் நகை வாங்குவோர் ஹாப்பி!! appeared first on Dinakaran.

Read Entire Article