4 நாடுகள் பங்குபெறும் மலபார் கடற்படை பயிற்சி; 8-ந்தேதி தொடக்கம்

3 months ago 24

புதுடெல்லி,

கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையே இருதரப்பு மலபார் கடற்படை பயிற்சி தொடங்கப்பட்டது. அதன் பின்னர், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் சவால்களை எதிர்கொள்வது மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த கடற்படை பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான மலபார் கடற்படை பயிற்சி வரும் 8-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயிற்சி தொடங்கப்பட்டு, பின்னர் கடல்சார் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மலபார் கடற்படை பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கடற்படை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியின்போது நீர்மூழ்கி எதிர்ப்பு போர், மேற்பரப்பு போர் மற்றும் வான் பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற சிக்கலான கடல்சார் நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படும் எனவும், கடல்சார் களத்தில் சுற்றுப்புற விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Read Entire Article