4 கோடி பார்வைகளை கடந்த 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல்

2 days ago 3

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இப்படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

இப்படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் சமீபத்தில் வெளியானது. தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

40 Million+ Views and trending worldwide The biggest melody of the year #NaanaaHyraanaa | #Lyraanaa | #JaanaHairaanSa is unstoppable on charts and hearts ❤️Tune in and hum your hearts out! https://t.co/P4MVVi8qNVA @MusicThaman melody! Sung By @shreyaghoshalpic.twitter.com/uIQmAttkFf

— Game Changer (@GameChangerOffl) December 1, 2024
Read Entire Article