4 ஆண்டுகளில் 70 கேங்மேன்கள் பலியானதாக வழக்கு: டான்ஜெட்கோ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

3 months ago 21

சென்னை: கேங்மேன்களை தொழில்நுட்ப பணிகளுக்கு ஈடுபடுத்துவதால் தமிழக மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டான்ஜெட்கோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 கேங்மேன்கள் மின் விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மின் விபத்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் கூட ஒரு கேங்மேன் பரிதாபமாக இறந்துள்ளார்.

Read Entire Article