லண்டன்: சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 3வது டெஸ்ட் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட உள்ளார்.
இந்நிலையில் முதல் 2 டெஸ்ட்டில் ஆடிய முகமது சிராஜிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட்டில் அறிமுகமாக உள்ளார். பிரசித் கிருஷ்ணாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டு பும்ரா இடம்பெறுகிறார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. கருண்நாயர், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர்.
The post 3வது டெஸ்ட்டில் சிராஜுக்கு ஓய்வு: அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு appeared first on Dinakaran.