3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

2 months ago 13

அகமதாபாத்,

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீராங்கனைகளாக சுசி பேட்ஸ்- ஜார்ஜியா ப்ளிம்மர் களமிறங்கினர். சுசி பேட்ஸ் 4 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த லாரன் டவுன் 1 ரன், கேப்டன் சோபி டெவின் 9 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மருடன் புரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஜார்ஜியா ப்ளிம்மர் 39 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் ஹாலிடே அரை சதம் விளாசினார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.இறுதியில் நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Read Entire Article