சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு கட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் நேற்று மாலை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2020-21, 2022-24 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு சிறப்பான பங்களித்த 38 பேருக்கு விருதுகள், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கினார். தவிர, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 18 சட்டப் பேரவை தொகுதிகளில் தலா, ரூ. 3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தவிர, 38 மாவட்டங்களில் திறன் மேம்பாட்டுக்காக 38 ஸ்டார் அகாடமிகளை அவர் திறந்து வைத்தார்.
The post 38 மாவட்டங்களில் ஸ்டார் அகாடமி 18 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.