35 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கலெக்டரிடம் மனு

1 month ago 14

திருவள்ளூர்: 35 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் அரண்வாயல் பகுதி ஏழை ஆதிதிராவிட மக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது: திருவள்ளூர் தாலுக்கா அரண்வாயில் கிராமத்தில் 35 ஆதிதிராவிடர் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி கடந்தாண்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 15 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் உடனடியாக 35 ஆதிதிராவிடர் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது விசிக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.குமார், பூண்டி ஒன்றிய செயலாளர் ராஜா, அதிகத்தூர் சரவணன், அம்பேத், அரன்வாயல் ராமு, முத்துவளவன், ரமேஷ், பிரயாங்குப்பம் டில்லி மற்றும் 35 ஆதிதிராவிட ஏழை குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

The post 35 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article