32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்

3 months ago 24

சண்டிகர்,

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், அரியானாவில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை 3வது முறையாக தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், அரியானாவில் உள்ள உஜ்ஜன கலன் தொகுதி பாஜக வேட்பாளர் தேவேந்தர் சாட்டர் பிஜு அடாரி வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தேவேந்தர் 48 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரேந்தர் சிங் 48 ஆயிரத்து 936 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 32 வாக்குகள் ஆகும்.

உஜ்ஜன கலன் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் சுஷந்த் ஷதலா 7 ஆயிரத்து 950 வாக்குகள் மட்டுமே பெற்று 5ம் இடம் பிடித்து படுதோல்வியடைந்தார்.

Read Entire Article