30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்

3 hours ago 2

சென்னை,

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியிலிருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் காண இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சூழலில் ஸ்பேஸ்-எக்ஸ் திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயார் நிலையில் நேர் நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது.

தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணையச் செய்வதற்காக இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த நான்காம் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

PSLV-C60/SPADEX Mission Update

Launch scheduled on 30th December 2024, 21:58 IST from SDSC SHAR, Sriharikota.

Witness the launch live at the Launch View Gallery!

Register here: https://t.co/J9jd8ylRcC

Registration starts: 23rd December 2024, 18:00 IST.#ISROpic.twitter.com/s05CHZCzrL

— ISRO (@isro) December 23, 2024


Read Entire Article