வேலூர், ஏப்.17: 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். காட்பாடியில் ஒரு பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை நேற்று காலை தனது வீட்டின் அருகில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு(23) என்பவர் குழந்தையிடம் நைசாக பேசி மறைவிடத்தில் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர் விரைந்து சென்று பார்த்த போது, குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுதொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா போக்ேசா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
The post 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் போக்சோ வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.