3-வது நாளில் ரூ. 300 கோடி: வசூலை குவிக்கும் 'தேவரா'

2 months ago 29

சென்னை,

ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள படம் 'தேவரா பாகம்-1'. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில், கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆரின் 30வது படமான 'தேவரா பாகம்-1' கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தநிலையில், 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், 3-வது நாளில் ரூ. 304 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A Bloodbath of Box Office records trembling with breathless mayhem #Devara + &Ends the First Weekend on a staggering scale ❤️#BlockbusterDevara pic.twitter.com/oi0UHdJEpj

— KVN Productions (@KvnProductions) September 30, 2024
Read Entire Article