3 மாதங்களில் 72 வழக்குகளில் 1638 மது பாட்டில்கள் 7 பைக்குகள் பறிமுதல் *7 பார்களுக்கு சீல் வைப்பு *கலால் டிஎஸ்பி தகவல்

1 month ago 5

செய்யாறு, நவ. 19: திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடந்த செப்டம்பர் மாதம் 24 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 562 மதுபான பாட்டில்களும், 255 புதுச்சேரி மதுபான பாட்டில்களும், 4 இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 578 மதுபான பாட்டில்களும் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 18ம் தேதிவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 243 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருவாய் துறையினருடன் இணைந்து சீலிடப்பட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து 8939473233 என்ற மாவட்ட காவல் துறை உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேற்று வரையில் கடந்த மூன்று மாதங்களில் 72 வழக்குகளில் 1638 மது பாட்டில்கள் 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அனுமதியின்றி செயல்பட்ட 7 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் உள்ளது.

The post 3 மாதங்களில் 72 வழக்குகளில் 1638 மது பாட்டில்கள் 7 பைக்குகள் பறிமுதல் *7 பார்களுக்கு சீல் வைப்பு *கலால் டிஎஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article