3 மணிக்கு அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு

1 week ago 4

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

அவர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். குருமூர்த்தியிடம் 1 மணிநேரத்திற்குமேல் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் அமித்ஷா இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். மதியம் 3 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

Read Entire Article