3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன : இந்திய ராணுவம்

5 hours ago 2

டெல்லி : 3 மணி நேரத்தில், பாகிஸ்தானின் நூர்கான், ரஃபிக்கி, முரீத், உட்பட 1 1 ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த விவரங்களையும் கூடுதல் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தியாவின் பாதுகாப்பு நோக்கங்களை உறுதி செய்யும் வகையில் பாக். ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவத்தின் திறன்களை வெற்றிகரமாக வெளிப்படுத்தும் வகையில் “ஆபரேஷன் சிந்தூர்” அமைந்தது. லாகூர் உட்பட பாகிஸ்தான் முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

பாக். தாக்குதல்களை முறியடிப்பதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.
இந்திய ராணுவம் மூன்றே மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை தாக்கி தகர்த்தது. நூர்கான், ரபீக்கி, முரித்கே, சக்கர், சியால்கேட், பஸ்ரூர், சுனியான், சர்கோடா தளங்கள் தகர்க்கப்பட்டன. ஸ்கரூ, போலாரி, ஜகோபாபாத் நகரங்களில் உள்ள விமானப்படை தளங்களும் தகர்க்கப்பட்டன. F-16 மற்றும் JF-17 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டன. பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் 20% கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஜகோதா, போலாரி ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. போலாரி விமானப்படை தளத்தில் நடத்திய தாக்குதலில் விமானப்படையினர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post 3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன : இந்திய ராணுவம் appeared first on Dinakaran.

Read Entire Article