
சென்னை,
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படம் மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து குருதி ஆட்டம் எனும் படத்தை இயக்கினார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த 4-ம் தேதி வெளியானது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரையரங்கில் வெளிவந்த '3 பிஎச்கே' திரைப்படம் உலகளவில் 2 நாட்கள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் கடந்த இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது