3 ஆண்டுகளை கடந்த பீஸ்ட் திரைப்படம்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!

5 days ago 5

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், அரபிக்குத்து பாடலில் இடம் பெற்ற விஜய்யின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. அதை நினைவூட்டும் விதமாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அவரது புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Life time memory to cherish, #3yearsofbeast. Ever grateful to my favourite #thalapathy @actorvijay sir for all the love ❤️ and thank you @sunpictures ❤️ https://t.co/i9sMUjzFE4 pic.twitter.com/EaDjFmWLfF

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 13, 2025

Hey Veera Raghavan Army, this one is for you! Celebrating 3 years of #Beast#3YearsofBeast #Beast pic.twitter.com/WgsZMNfEbD

— Sun Pictures (@sunpictures) April 13, 2025
Read Entire Article