2வது டெஸ்ட் போட்டி: பும்ரா, குல்தீப் இடம் பெறாதது ஏன்..? - சுப்மன் கில் பதில்

1 week ago 4

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி இடம் பிடித்தனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன் என்பது குறித்து கேப்டன் கில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே தீர்மானித்திருப்போம். இந்த பிட்ச்சில் ஏதேனும் சவால் இருந்தால் அது முதல் நாளாக இருக்கும். எங்களுடைய அணியில் 3 மாற்றங்கள் செய்கிறோம்.

நிதிஷ் ரெட்டி, சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் வருகிறார்கள். பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு பும்ரா விளையாடவில்லை. அடுத்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கே அவரை நாங்கள் அதிகம் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறோம். இந்தப் போட்டிக்கு முன்பாக நல்ல இடைவெளி கிடைத்தது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி.

குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் கடந்தப் போட்டியை பார்க்கும் போது எங்களுடைய லோயர் ஆர்டர் நன்றாக விளையாடவில்லை. எனவே பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article