பர்மிங்காம்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் நங்கூரமாய் நின்று ஆடி ரன் குவிப்பில் பதிலடி தந்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக, பர்மிங்காமில் நடந்து வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள், 84 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஹேரி புரூக், ஜேமி ஸ்மித் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர்.
தேனீர் இடைவேளை வரை, இங்கிலாந்து அணி, 75 ஓவரில், 5 விக்கெட் இழந்து 355 ரன் எடுத்திருந்தது. நங்கூரமாய் நின்று ஆடிய ஜேமி ஸ்மித் 157 ரன் (169 பந்து, 3 சிக்சர், 19 பவுண்டரி), ஹாரி புரூக் 140 ரன் (209 பந்து, 1 சிக்சர், 15 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அவர்களது பங்களிப்பில் 271 ரன்கள் குவிந்ததால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா தரப்பில், முகம்மது சிராஜ் 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
The post 2வது டெஸ்டில் நங்கூரமாய் நின்றாடிய இங்கிலாந்தின் ஸ்மித்: இந்தியாவுக்கு பதிலடி appeared first on Dinakaran.