2வது டி20 போட்டி: தோல்விக்கு காரணம் என்ன? வங்காளதேச அணியின் கேப்டன் விளக்கம்

3 months ago 22

புதுடெல்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன் என்று வங்காளதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விஷயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.ஆனால் 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதேசமயம் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களும் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.இவ்வாறு நஜ்முல் கூறினார்.

Read Entire Article