2வது ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

7 months ago 25

புலவாயோ,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனைதொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தும் புலவாயோவில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஜிம்பாப்வே களம் இறங்கும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றிக்காக பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த அணியில் கடந்த ஆட்டத்தில் இடம்பெற்ற ஹசீபுல்லா கான், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக தையப் தாஹீர், அப்ரார் அகமது இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம்; சைம் அயூப், அப்துல்லா ஷாபீக், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தையப் தாஹீர், சல்மான் அலி ஆகா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஆமீர் ஜமால், ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது, பைசல் அக்ரம்.


Pakistan's playing XI for the second ODI against Zimbabwe

Tayyab Tahir and Abrar Ahmed will make their ODI debut tomorrow #ZIMvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/QyhFTVdFUv

— Pakistan Cricket (@TheRealPCB) November 25, 2024

Read Entire Article