2ம் திருமணத்திற்கு எதிர்ப்பு.. மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது

15 hours ago 1

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் மார்ச் 9ம் தேதி இரண்டு சிறுவர்கள் தூக்கிட்டு உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இறந்த சிறுவர்கள் ஆகாஷ் மொஹந்தி (14) மற்றும் பிகாஷ் மொஹந்தி (9) என அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இறந்த சிறுவர்களின் தாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுவர்களின் தந்தை இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்தார். இதற்கு இரண்டு சிறுவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிலும் மூத்த மகன் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவர்களது தந்தை அவரது தாயின் உதவியுடன் இந்த சிறுவர்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் கூரையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article