27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

7 months ago 28

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமானப்படை தளம் வரும் திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகை செல்கிறார்

இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்

Read Entire Article