27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த பாஜக : டெல்லி சட்டப்பேரவை கூடியது

3 hours ago 1

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி பதவியேற்றுக் கொண்டார். அவர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு, இன்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில், முதல்கட்டமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பாஜக சார்பில் எம்எல்ஏ விஜேந்தர் குப்தா பேரவைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்படுகிறார். மொத்தம் 70 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 48, ஆம் ஆத்மிக்கு 12 உறுப்பினர்கள் உள்ள நிலையில், விஜேந்தர் குப்தா ஒருமனதாக பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சி தலைவராக ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான அடிசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று அக்கட்சியின் தலைவர் கெஜரிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

 

The post 27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த பாஜக : டெல்லி சட்டப்பேரவை கூடியது appeared first on Dinakaran.

Read Entire Article