பெரம்பலூர்,ஜன.24: நாளை மறுநாள் நாட்டின் குடியரசு தினவிழா நடப்பதையொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்திய நாட்டின் குடியரசு தினவிழா பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நாளை மறுநாள் (26ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக கொண்டா டப் பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்ப லூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப். கலெக்டர் கோகுல் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்து, காவல் துறையினர், ஊர்க் காவல் படையினருடன் இணைந்து நடத்தும் அணி வகுப்பு மரியாதையை ஏற் கிறார்.
பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள், நற் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற உள்ளன. இதை முன்னிட்டு நேற்று (22 ம் தேதி) புதன்கிழமை காலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து, நாட்டின் குடியரசு தின விழா நடைபெற உள்ள, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பூக்களை கற்களை அகற்றி சீரமைத்துத் தூய்மை செய்யும் பணிகளில் ஈடு பட்டனர்.
The post 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம்: விளையாட்டு மைதானம் தூய்மைப்படுத்தும் பணி மும்முரம் appeared first on Dinakaran.