25வது நாளில் வெளியான 'லப்பர் பந்து' புதிய போஸ்டர்

3 months ago 23

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் விஜயின் ரசிகராக நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ தொடர்பான கதை தான் இந்த லப்பர் பந்து. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#LubberPandhu - Blockbuster 25th day ❤️Extremely thankful to all our audiences for showering the film with loads of 'Anbu' and showing us that Tamil Nadu is 'Gethu'!Produced by @lakku76 andCo-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #GethuDineshpic.twitter.com/faf825Nz5B

— Prince Pictures (@Prince_Pictures) October 14, 2024
Read Entire Article